ஆதரவில்லாத முதியோர்களுக்கு சிகை அலங்கார உதவி
திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையத்தில் கடந்த 24 ஆண்டு காலமாக எங்களது நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை அமைப்பு இயங்கி வந்த நிலையில் தற்போது நிரந்தர மறுவாழ்வு இல்லம் அமைக்கபடும் வழிகளில் தற்போது திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா போத்தம்பாலையத்தில் இயங்கி வருகிறது. இதனையடுத்து நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை அமைப்பு மூலமாக ஆதரவற்று பல்வேறு நிலைகளில் பரிதவிக்கும் என்னற்ற ஜீவன்களுக்கும் உதவி வருகின்றோம் என்பதை பலரும் அறியக் கூடும்.
இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் 01-06-2024 திருப்பூர் மாநகராட்சி சாந்தி தியேட்டர் அருகாமையில் உள்ள தேசிய நகர்புற வீடற்ற ஆதரவற்றோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்ட பலரும் உறவுகளால் கை விடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், நோய் வாய் பட்ட ஏழை எளியோர்களின் உடல் நலன் கருதி முகாமில் தங்க வைக்கப்பட்ட 30 மேற்பட்ட முதியோர்களுக்கு நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மூலம் இலவசமாக முடித்திருத்தம் முகச்சவரம் செய்து மொட்டையடித்து உதவியுள்ளோம். இதுபோன்ற சேவைகளை மாத மாதம் திருப்பூர் மட்டும் இல்லாமல் பிற மாவட்டங்களிலும் உணவு உடை வழங்கி உதவி வருகின்றோம் என்கிறார் அறக்கட்டளை நிறுவனர் தெய்வராஜ்.