நோயாளிகளுக்கான “ஹம்சா” மறுவாழ்வு மையம் தொடக்கம்

நோயாளிகளுக்கான “ஹம்சா” மறுவாழ்வு மையம் தொடக்கம்

மறுவாழ்வு மையம் துவக்கம்  

திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள காவேரி மருத்துவமனையில் ஹம்சா மறுவாழ்வு மையம் நேற்று தொடங்கப்பட்டது

தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனையான காவேரி மருத்துவமனை, நோயாளிகள் முதுகுத்தண்டு மற்றும் மூளை நரம்பியல் பாதிப்புகளிலிருந்து மீண்டு மறுவாழ்வு பெறுவதை குறிக்கோளாக கொண்டு ஹம்சா மறுவாழ்வு மையத்துடன் இணைந்து சென்னை மாநகரில் 2019-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் விரிவான, முழுமையான மறுவாழ்வு சேவை மையமாக தொடங்கப்பட்டது. இப்போது 5 சேவை மையங்களாக இது வளர்ச்சி கண்டிருக்கிறது. தற்போது 6-வது மையமாக திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள காவேரி மருத்துவமனையில் ஹம்சா மறுவாழ்வு மையம் நேற்று தொடங்கப்பட்டது.

திருச்சியில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தில் இயன்முறை சிகிச்சை நிபுணர்கள், பணி சார்ந்த சிகிச்சையாளர்கள், உளவியல் மருத்துவர்கள், பேச்சு சிகிச்சை நிபுணர்கள், செயற்கை கால், சிறப்பு காலணிகள் செய்வோர், தொழில்முறை பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் மறுவாழ்வுடன் தொடர்புடைய சிறப்பு நிபுணர்கள் என்று பலவகை சேவை வழங்குனர்களும் ஒரே இடத்தில் சேவை வழங்க இருக்கிறார்கள்.மருத்துவரின் வழிகாட்டல் மற்றும் தலைமையின் கீழ் இயங்கும் இந்த மையத்தில் நோயாளிகள் அனைவருக்கும் உகந்த பயிற்சி அளித்து, அவர்கள் மறுவாழ்வு பெற்று இயல்புறிவைக்குத் திரும்ப தேவையான அனைத்து சாதனங்களும், வசதிகளும், இம்மையத்தில் நிறுவப்பட்டுள்ளன.

இங்கு முதுகுத்தண்டு காயம், மூளைக்காயம், பக்கவாதம், முதுகு மற்றும் கழுத்து வலி, எலும்பியல் பாதிப்புகள், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் ஆகியவற்றால் அவதியுறும் நோயாளிகளுக்கு உள்நோயாளி, வெளி நோயாளி, வீட்டிலேயே சிகிச்சை மற்றும் பகல்நேர (டே கேர்) சேவைகள் ஆகியவற்றை இம்மையங்கள் வழங்கி வருகின்றன. அத்துடன் பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிரசவத்திறகுப் பிந்தைய மறுவாழ்வு மற்றும் குழந்தைகளுக்கான மறுவாழ்வு சேவைகளும் இங்கு வழங்கப்படுகின்றன.

தொடக்க விழாவில் காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், ஹம்சா மறுவாழ்வு மையத்தின் பங்குதாரருமான டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ் கூறும் போது, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் பல்வேறு பெருநகரங்களில் இயங்கி வரும் காவேரி மருத்துவமனை, 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக உயர்தர சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது.பெரும்பாலான கார்ப்பரேட் மருத்துவமனைகளில் இடம்பெறாத ஒரு சுகாதார சிகிச்சைப்பிரிவாக மறுவாழ்வு சேவை இருக்கிறது. கட்டுபடியாகக்கூடிய மிதமான கட்டணத்தில் உயர்தர மறுவாழ்வு சேவைகளை வழங்கும் ஒரு விரிவான மற்றும் பிரத்யேக மையமாக ஹம்சா இயங்கி வருகிறது’ என்றார்சென்னை மாநகருக்கு வெளியே இயங்கும் பிரத்யேசு மறுவாழ்வு மையங்கள் வெகு சில மாவட்டங்களின் மையமாக திகழும் திருச்சி, உள்நோயாளி களுக்கான படுக்கை வசதிகளுடன் ஒரு முழுமையான, விரிவான மறுவாழ்வு மையத்தை இப்போது பெற்றிருக்கிறது என்பதை அறிவிப்பதில் பெருமை கொள்வதாக குறிப்பிட்ட ஹாம்சா மறுவாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜி.பாலமுரளி கூறினார்.

Tags

Next Story