மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி: பரிசு வழங்கல்

X
பரிசு வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் பரிசினை வழங்கி வாழ்த்தினார்.
திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் அருள் அவர்கள் ஏற்பாட்டில் இன்று அருணை பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிக்கான கிரிக்கெட் போட்டியில் ஆறு மாவட்டங்கள் கலந்து கொண்டு மண்டல அளவிலான மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் நடைபெற்றது.
அதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் முதல் பரிசை பெற்று வெற்றி பெற்றனர் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி பரிசினை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Next Story
