கானை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
காணை ஒன்றியத்துக்குள்பட்ட காங்கேயனூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்க மறுக்கப்பட்டதையடுத்து,
மீண்டும் தங்களுக்கு வேலை வழங்கக் கோரி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச்சங்கத்தின் சாா்பில் மாற்றுத் திறனாளிகள் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினா்.
இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ.கிருஷ்ணமூா்த்தி, துணைச் செயலா் எம்.முத்துவேல் ஆகியோா் போராட்டத்தில் பங்கேற்று பேசினா். ஒன்றியத் துணைச் செயலா் கே.குமரன் உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்ட அலுவலா்கள்,
மாற்றுத் திறனாளிகளை அழைத்து பேசினா். மாலைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.