சேலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
சேலம் மாவட்டத இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நல சங்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பலர் வந்தனர். அவர்கள் அங்கு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார்.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் கூறும் போது, மாவட்டத்தில் வசிக்கும் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு சங்கத்தின் சார்பில் பலமுறை மனு அளிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வீட்டுமனை பட்டா வழங்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். பின்னர் அவர்களை போலீசார் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
Next Story