திண்டுக்கல் அருகே கைவினை உடை தயாரிப்பு பயிற்சி முகாம்

திண்டுக்கல் அருகே கைவினை உடை தயாரிப்பு பயிற்சி முகாம்

முகாமில் கலந்து கொண்டவர்கள் 

திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சித்திர தையல் கைவினையர்களின் செயல் முறை மற்றும் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம், காந்திகிராம பல்கலைக்கழக மனையியல் துறை, திண்டுக்கல் கை சித்திர தையல் கைவினைகள் தயாரிப்பாளர் நிறுவனம் ஆகியவை இணைந்து சித்திர தையல் கைவினையர்களின் செயல் முறை மற்றும் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

கை சித்திர தையல் கைவினைகள் தயாரிப்பாளர் நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் வரவேற்றார். பல்கலைக்கழக பதிவாளர் ராதாகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தார்.இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சித்திர தையல் மூலம் ஆடைகளை வடிவமைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story