கோவில்பட்டி பள்ளியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி
கைவினைப்பொருட்கள் கண்காட்சி
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளி சார்பில் பள்ளி வளாகத்தில் கைவினைப் பொருள்களின் கண்காட்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜா அமரேந்திரன், மணிக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றார். கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் கமலா கைவினைப் பொருட்களின் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டு ஆங்கிலத் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
கண்காட்சியில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்களை செய்து மாணவர்கள் காட்சிப் படுத்தினர். இதனை நகராட்சி சுகாதார ஆய்வாளர் நாகராஜ்,மேற்பார்வையாளர் பட்டாணி உள்பட பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர். நிறைவாக ஆசிரியர் அருள் காந்த்ராஜ் நன்றி கூறினார்.