வேலூர் பூம்புகாரில் கைவினை பொருட்கள் கண்காட்சி

வேலூர் பூம்புகாரில்  கைவினை பொருட்கள் கண்காட்சி


வேலூர் பூம்புகார் கைவினை பொருட்கள் கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி துவங்கி வைத்தார் .


வேலூர் பூம்புகார் கைவினை பொருட்கள் கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி துவங்கி வைத்தார் .

வேலூர் பூம்புகார் கைவினை பொருட்கள் கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி துவங்கி வைத்தார் . வேலூர்மாவட்டம், வேலூரில் உள்ள நகர அரங்கில் தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகம் பூம்புகார் சேலம் விற்பனை நிலையம் சார்பில் கைவினை கலைஞர்கள் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் சிறப்பு கண்காட்சி இன்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார் . 10 நாட்கள் நடக்கும் இக்கண்காட்சியில் பொருட்கள் வாங்குவோருக்கு 10 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது இக்கண்காட்சி ஜனவரி 28 ஆம் தேதி வரையில் இக்கண்காட்சி செயல்படும்

இதில் பித்தளை கலை பொருட்கள் பித்தளை சிற்பங்கள் கலை பொருட்கள் ஓவியங்கள் மரசிற்பங்கள் பொம்மைகள்,கற்சிற்பங்கள் முத்து பவளம்,வலம்புரி சங்குகள், நவரத்தின கருங்காலி மாலைகள் பஞ்சலோக நகைகள் சிலைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருட்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. குறைந்த பட்சம் ரூ.50 முதல் ரூ.65 ஆயிரம் வரையிலான பொருட்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது இக்கண்காட்சியில் 10 நாட்களுக்கு ரூ.12 லட்சம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இலக்கை அடைவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் பூம்புகார் நிறுவன மேலாளர் நரேந்திர போஸ் மற்றும் அரிஹரன் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்

Tags

Next Story