உள்ளாட்சி பிரதிநிதிகளின் வாகனங்கள் தேர்தல் பயன்பாட்டுக்காக ஒப்படைப்பு

உள்ளாட்சி பிரதிநிதிகளின் வாகனங்கள் தேர்தல் பயன்பாட்டுக்காக ஒப்படைப்பு

ஒப்படைக்கப்பட்ட வாகனங்கள்

விழுப்புரத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் வாகனங்கள் தேர்தல் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்டது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இத்தேர்தலையொட்டி கடந்த 16-ந் தேதி மாலையில் இருந்து அனைத்து மாவட்டங்களி லும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணமோ, பரிசுப்பொருட்களோ கொடுக்க வாகனங்களில் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண் காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வாகன சோதனையை தீவிரப்படுத்தும் விதமாக மாவட்டத்தில் கூடுதலாக பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழுக் கள் அமைக்கப்பட உள்ளது. அதற்காகவும், இதர தேர்தல் பணி பயன்பாட்டுக்காகவும் வாகனங்கள் தேவைப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில் நகரமன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் பயன்படுத்தி வரும் அரசு வாகனங்கள் தேர்தல் பயன்பாட்டுக்காக கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Tags

Next Story