திருச்செங்கோட்டில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை

திருச்செங்கோட்டில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை

கைத்தறி கண்காட்சி 

நாடு முழுவதும் 02.10.2023 முதல் 31.10 2023 வரை இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தால் காதி மகா உத்சவ் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்மஹா உற்சவ காலத்தில் நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோட்டில் 17.10.2023 முதல் 22.10.2023 வரை 6 நாட்களுக்கு சேலம் நெசவாளர் சேவை மையம் சார்பாக மாவட்ட அளவிலான கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.தள்ளுபடி திருச்செங்கோடு நெல் குத்தி மண்டபத்தில் நடக்க உள்ள இக்கண்காட்சியினை நாமக்கல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி சின்ராஜ், கொ.ம.தே.க நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இக்கண்காட்சியில் இருபதுக்கும் மேற்பட்ட கைத்தறி சங்கங்கள் தங்களது கைத்தறி ரகங்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் ஐந்து கைவினைக் கலைஞர்கள் தங்களது உற்பத்தியினை விற்பனைக்கு காட்சி படுத்தியுள்ளனர்.

சிறப்பு விருந்தினர்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட சேலம் வெண்பட்டு வேஷ்டிகள் பட்டு அங்கவஸ்திரங்கள் காஞ்சிபுரம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கைத்தறி பெட் சீட்டுகள், மெத்தை விரிப்புகள் மற்றும் கைவினைபொருட்களை பார்வையிட்டு தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். அனைத்து கைத்தறி ரகங்களுக்கும் தீபாவளி பண்டிகை கால தள்ளுபடியாக 30% வழங்கப்பட்டு வருகிறது. இக்கண்காட்சியினை ஏற்பாடு செய்துள்ள சேலம் நெசவாளர் சேவை மைய துணை இயக்குனர் கார்த்திகேயன், மக்கள் அனைவரும் இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறி ரகங்களை வாங்கி கைத்தறி நெசவாளர்களுக்கு பக்கபலமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story