விருதுநகர் மாவட்டத்தில் அரசு கட்டிடங்களை பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு

விருதுநகர் மாவட்டத்தில் அரசு கட்டிடங்களை பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு
விருதுநகர் மாவட்டத்தில் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் மாவட்டத்தில் புனரமைக்கப்பட்ட அரசு கட்டிடங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்படைப்பு
விருதுநகர் மாவட்டத்தில் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் மாவட்டத்தில் புனரமைக்கப்பட்ட அரசு கட்டிடங்களை பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், பழுதுபார்த்தல், வர்ணம் பூசுதல், பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கான ஓய்வறைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை சிவகாசி லவ்லி கார்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் தியாகராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, நடையநேரி அரசு மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணன் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி, உள்ளூர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, டி.மானகசேரி அரசு மேல்நிலைப்பள்ளி, தேவர்குளம் அரசு தொடக்கப்பள்ளி, எரிச்சநத்தம் அரசு தொடக்கப்பள்ளி, வடப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, மத்தியசேனை அரசுப்பள்ளி, ஆலமரத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய 10 பள்ளிகளில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு,

மாவட்ட நிர்வாகத்திடம் பணி முடித்து பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், மேம்படுத்துதல் மற்றும் புரணமைத்தல் பணிகள் சிவகாசி லவ்லி கார்ட்ஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. லவ்லி கார்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் மாவட்டத்தில் 10 அரசு பள்ளிகள் மற்றும் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்துதல் மற்றும் புரணமைத்தல் பணிகள் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.15.64 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு லவ்லி கார்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் .க.செந்தில்குமார் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் ஒப்படைத்தார்.

Tags

Next Story