எய்ட்ஸ் தின கருப்பொருள் குறித்த கையெழுத்து இயக்க பிரசாரம்

எய்ட்ஸ் தின கருப்பொருள் குறித்த கையெழுத்து இயக்க பிரசாரம்

எய்ட்ஸ் தின கையெழுத்து இயக்கம் 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொடங்கி நடைபெற்றது, தொடர்ச்சியாக டிசம்பர் 16ஆம் தேதி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் தலைமையில் உலக எய்ட்ஸ் தின கருப்பொருள் குறித்த கையெழுத்து இயக்கப்பிரச்சாரமும்,, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 36 நபர்களுக்கு மாதாந்திர உதவி தொகைகாண ஆணையும் வழங்கப்பட்டது. பின்னர் சமூகங்களுடன் சேர்ந்து எச் ஐ வி எய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுப்போம் என்கிற கருப்பொருளை வலியுறுத்தும் வகையில் சமபந்தி போஜனம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் சுகாதாரப் பணிகள் துணை மருத்துவர் பொற்கொடி, மாவட்ட திட்ட மேலாளர் சுமதி, எச்ஐவி உடன் வாழ்பவர்களுக்கான கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீநாதன் , ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை திட்ட மேலாளர் மற்றும் பணியாளர்கள், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு உதவியாளர்கள் ,ஆலோசகர்கள், ஆய்வக நுட்புணர்கள் மற்றும் நம்பிக்கை மையம் , சுகவாழ்வு மையம், ஏ.ஆர். டி. மையம், குருதி வங்கி ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story