ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி

தபால் ஆஞ்சநேயர்
சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோவில் வளாகத்தில்யுள்ள ஸ்ரீ தபால் ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா ஜனவரி 3ம் தேதி புதன்கிழமை தொடங்கி ஜனவரி 11ம் தேதி வியாழக்கிழமை வரை நடைபெற உள்ளது. ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோவில் வளாகத்தில்யுள்ள ஸ்ரீ தபால் ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா ஜனவரி3ம் தேதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு பூர்ணாபிஷேகத்துடன் தொடங்க உள்ளது.
அதனையடுத்து (ஜன.4ம் )தேதி வியாழக்கிழமை வெண்ணை காப்பு அலங்காரமும், ஜன.5ம் தேதி வெள்ளிக்கிழமை சந்தனகாப்பு அலங்காரமும், ஜன.6ம் தேதி சனிக்கிழமை வெற்றிலைகாப்பு, ஜன.7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பழக்காப்பு, ஜன.8ம் தேதி திங்கள்கிழமை வெட்டிவேர்காப்பு, ஜன.9ம் தேதி செவ்வாய்க்கிழமை செந்தூரகாப்பு , ஜன.10ம் தேதி புதன்கிழமை வடைமாலை சாத்துதல், ஜன.11ம் தேதி வியாழக்கிழமை இராஜங்க சேவையும் நடைபெற உள்ளது. அனுமன் ஜெயந்தியையொட்டி சுவாமிக்கு தினசரி மாலை 5 மணிக்கு பூஜைகள் தொடங்கி இரவு 8.30 மணி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
