அனுமன் ஜெயந்தி: சுசீந்திரம் கோவிலில் ஒரு லட்சம் லட்டு தயாரிப்பு 

அனுமன் ஜெயந்தி: சுசீந்திரம் கோவிலில்  ஒரு லட்சம் லட்டு தயாரிப்பு 

 அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்களுக்கு வழங்குவதற்காக சுசீந்திரம் கோவிலில் ஒரு லட்சம் லட்டுகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்களுக்கு வழங்குவதற்காக சுசீந்திரம் கோவிலில் ஒரு லட்சம் லட்டுகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஒரே கல்லிலான 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு ஆண்டுதோறும் ஜெயந்தி விழா கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வரும் 10-ம் தேதி நடக்கிறது.

ஜெயந்தி விழாவை ஒட்டி ஒன்பதாம் தேதி காலை 5 மணி கணபதி ஹோமம் இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட காலபைரவருக்கு தீபாராதனை நடக்கிறது. 10ஆம் தேதி காலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு எதிரே அமர்ந்துள்ள ராமபிரானுக்கு அபிஷேகம், 8 மணிக்கு 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஷோடச அபிஷேகம் நடக்கிறது. இதில் 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ஒரு லட்சம் லட்டு தயாரிக்கும் பணி நேற்று காலை தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் பூஜை செய்து தொடங்கி வைத்தனர். இந்த பணியில் சுமார் 50 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

Tags

Next Story