விருதுநகரில் முதல்முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி
ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது
ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் கல்லூரி சாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியை முக்கிய நோக்கம் போதைப் பழக்கத்தில் இருந்து இளைஞர்களை ஆண்களை மீட்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் நடனகங்களும் நடை பெற்றது வாரம் முழுவதும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரக்கூடிய தொழிலாளர்கள் முதலாளிகள் என அனைவரும் கலந்து கொள்ளக் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்ய பட்டு இருந்தது. காலை 7 முதல்10 மணி வரை வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 1000 மேற்பட்ட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் மாதவன் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் ஆடல் பாடல் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் ஏராளமானோர் கலந்துகொண்டு நடனமாடி இந்த நிகழ்ச்சியை கொண்டாடினர்.


