சென்னையில் செலவு செய்யப்பட்ட பணம் பாதாளத்தில் சென்று விட்டதா? டாக்டர் ராமதாஸ் கேள்வி
அம்பேத்கரின் 67வது நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் திருஉருரவசிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் மற்றும் அக்கட்சியை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 'சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னுடைய அனுதாபங்கள். இன்னும் ஒரு நாள் சென்னையில் மழை பெய்தால் நினைத்துக் கூட பார்க்க முடியாமல் அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும். சென்னை மக்கள் மிகவும் துயரத்தில் உள்ளனர். இது சம்பந்தமாக விரிவான அறிக்கை ஒன்றை நான் கொடுத்திருக்கிறேன்.
அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அனைத்திலும் தண்ணீர் நிற்கிறது. செலவு செய்யப்பட்ட பணம் அனைத்தும் பாதாளத்தில் விடப்பட்டுள்ளதா? ஒன்றுமே தெரியவில்லை .பாமக சார்பில் மழைக்காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கடந்த ஆண்டு படகுகள் மூலம் மீட்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது' எனக் கூறினார்.