இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு பேச்சு: மோடி மீது புகார்
மனு அளிக்க வந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர்
இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புடன் மோடி பேசியதாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமையில் அதன் நிர்வாகிகள், ஒரு மனு கொடுத்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு பேச்சை பேசியுள்ளார்.
பிரதமர் மோடி, அரசியல் சட்டத்துக்கு எதிராக பேசுவது மட்டுமின்றி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற் றின் கீழ் கடுமையான குற்றங்களையும் இழைத்துள்ளார்.
எனவே இந்த பிரச்சினையில் தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு, பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தனர்.
Next Story