ஹஜ்ரத் சையது முகமது கனி அவுலியா தர்கா சந்தனக்கூடு

அன்னவாசல் அருகே வயலோகத்தில் உள்ள மகான் அஜரத் சையது முகமது கனி அவுலியா தர்கா சந்தன கூடு விழாவில் ஜாதி,மத பேதமின்றி அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வயலோகத்தில் மகான் அஜரத் சையது முகமது கனி அவுலியா தர்கா உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து மத நல்லிணக்க விழாவாக சந்தனக்கூடு விழா நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு விழாவிற்கு கொடியேற்ற விழா கடந்த 21ஆம் தேதி நடந்தது. இதனைத் தொடர்ந்து தர்காவில் சிறப்பு பிரார்த்தனை துவா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா இன்று அதிகாலை 4 மணிக்கு நடந்தது. விழாவை ஒட்டி நடன குதிரைகள் நடனமாட வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு நகரில் வலம் வந்து முக்கிய வீதிகளின் வழியாக தர்காவை வந்தடைந்தது. அப்போது ஏராளமானோர் பூக்களை சந்தனக்கூடு மேல் செலுத்தி வழிபட்டனர். இதில் அனைத்து சமுதாயத்தினரும் ஜாதி ,மதம் பேதம் இன்றி மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழாவில் கலந்து கொண்டனர். விழாவை ஒட்டி இசை கச்சேரி, வானவேடிக்கை, அன்னதானங்கள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.

Tags

Next Story