சேலம் அருகே இளம்பெண்ணை ஏமாற்றியவர் கைது

சேலம் அருகே இளம்பெண்ணை ஏமாற்றியவர் கைது

கோப்பு படம் 

சேலம் அருகே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய மருந்து விற்பனை பிரதிநிதி கைது செய்யப்பட்டார்.

சேலம் சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 28). மருந்து விற்பனை பிரதிநிதி. இவரும், 25 வயதுடைய இளம்பெண் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி வந்தனர்.

அப்போது ராமகிருஷ்ணன் அந்த இளம்பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த இளம்பெண்ணை ராமகிருஷ்ணன் திடீரென திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுகுறித்து அம்மாபேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

Tags

Next Story