அஞ்சு வருஷமா எங்கம்மா போன என வந்தா கேளுங்க: எம்.ஆர் விஜயபாஸ்கர்

அஞ்சு வருஷமா எங்கம்மா போன என வந்தா கேளுங்க: எம்.ஆர் விஜயபாஸ்கர்

வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்

அஞ்சு வருஷமா எங்கம்மா போன என வந்தா கேளுங்க என எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்கவேலுக்கு ஆதரவு கேட்டும்,

பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க கரூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர், இன்று கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வீரராக்கியம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த பொது மக்களிடையே பேசும்போது, இது முக்கியமான தேர்தல் என்றும், 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக வென்றால்தான், அதிமுக காலத்தில் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் பொது மக்களுக்கு கிடைக்கும் என்றார்.

பிரச்சாரத்திற்கு இன்று வேட்பாளர் தங்கவேல் அங்கு வராத சூழலில், அவருக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட எம் ஆர் விஜயபாஸ்கர், வேட்பாளர் தங்கவேல் இன்று வரவில்லை என்றாலும், வாக்கு கேட்க மற்றொரு நாளில் அவரை அழைத்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, வெற்றி பெற்றவுடன் 11 மணிக்கு காவிரி ஆற்றில் மணல் அல்லலாம். எவனும் உங்களை தடுக்க மாட்டான். கேட்டால் அவன் இருக்க மாட்டான். என கூறினார்களே! இப்போது யார் மணல் அள்ளுகிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.

அப்போது பிரச்சார வாகனத்தின் முன்பு கூடி இருந்த பெண்களில், அவர்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டிருந்தனர். இதை கவனித்த எம் ஆர் விஜயபாஸ்கர், மொட மொடன்னு இப்படி பேசுறியே ம்மா, கொஞ்சம் கவனி என கூறிவிட்டு, இதற்கு முன் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற எம்பி யார் என உனக்கு தெரியுமா? என அந்தப் பெண்ணிடம் கேள்வி கேட்டுவிட்டு, அவரே பதிலும் சொன்னார்.

வெற்றி பெற்ற ஜோதிமணி, ஐந்து வருடமாக இந்த பக்கம் வந்ததை யாராவது பார்த்தீர்களா? யாருக்கும் அடையாளமும் தெரியாது. வந்தால் அவரிடம் கேளுங்கள் அஞ்சு வருஷமா எங்கம்மா போன? என கூறினர்.

Tags

Next Story