திருநீற்றின் பெருமையை உலகறிய செய்தவர் மெய்பொருள் நாயனார்

மெய்பொருள் நாயனார் குருபூஜை விழா
சாணிப்பூண்டி திருத்தலத்தில் 7ஆம் ஆண்டு மெய்பொருள் நாயனார் குருபூஜை விழாவில் பூமியில் தோன்றிய 63 நாயன்மார்களில் மெய்பொருள் நாயனார் சைவத்தின் பெருமையை, திருநீற்றின் பெருமையை உலகறிய செய்தவர் என கரூர் ஸ்ரீநந்தீஸ்வரர் ஞானபீடத்தின் சித்த குருஜி அருளுரை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் சாணிப்பூண்டியில் அமைந்துள்ள மெய்பொருள் நாயனார் திருத்தலத்தில் 7ஆம் ஆண்டு மெய்பொருள் நாயனார் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு பெரியகுளம் கே.என். குமரன்தேவர் தலைமை வகித்தார். வடசேரி நேசநாயனார் அறக்கட்டளை துணை தலைவர் எம்.முருகன் முன்னிலை வகிக்க பாஜக திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்ட துணை தலைவர் டி.சிவசங்கரன் அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவையொட்டி நேற்று காலை 7.20 மணிக்கு மெய்ப்பொருள் நாயனார் திருமஞ்சன வழிபாடு சிவனடியார்களுக்கு பாத பூஜையும், 8.20மணிக்கு ஆலயத்திலிருந்து குருநாதர் மெய்ப்பொருள் நாயனார் விழா மேடை நோக்கி புறப்பாடும் நடைபெற்றஅதனைத் தொடர்ந்து 10.20க்கு சேலம் ஜெ.குமார் தொகுப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து நவநாத சித்தர் மரபை சேர்ந்த கரூர் ஸ்ரீநந்தீஸ்வரர் ஞானபீடம் சித்தகுருஜி திருவண்ணாமலை ஸ்ரீகமலாபீடத்தின் நிறுவனர் பொறியாளர் சீத்தாசீனுவாச சுவாமிகள் வரகூர் பிடாரிபீடத்தின் சுரேந்திநாத் சுவாமிகள் மெய்ப்பொருள் அடிமை விநாயக மூர்த்தி சுவாமிகள் ஆகியோர் பக்தர்களுக்கு அருளாசிவழங்கினர். அப்போதுஸ்ரீகமலாபீடம் நிறுவனர் பொறியாளர் சீத்தாசீனுவாச சுவாமிகள் பேசுகையில், இன்பமும், துன்பமும் நமதுகர்மா அடிப்படையிலேயே அமைகிறது. எது நடந்தாலும் நன்மைக்கே என எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பிறவிலேயே நல்லதை செய்யுங்கள். நமது தாய்-தந்தையரை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். அடுத்த பிறவி வேண்டாம் என வேண்டிக் கொள்ளுங்கள்என்றார். அதனைத் தொடர்ந்து கரூர் ஸ்ரீநந்தீஸ்வரர் ஞானபீடத்தின் சித்த குருஜி பேசுகையில், மனிதர்களுக்கு மட்டும் தான் 6 அறிவு உள்ளது. எனவே இந்த அறிவை பயன்படுத்தி நாம் தெளிவு பெறவேண்டும்.பிரபஞ்சத்தை தெரிந்து கொள்வது ஞானம். நவகோள்கள் ஒன்றுக் கொன்று முட்டாமல் வலம் வருவது என்பது பேரறிவு. இதற்கு கர்தா யார் என்றால் கடவுள்தான். நம்மை இறைவன் அழகாக படைத்திருக்கிறார். சிந்திக்க ஆற்றலை தந்திருக்கிறார். உலகம் சார்ந்த பொருட்களை பற்றித்தான் நம் சிந்தனை செல்கிறது. நம்மை படைத்த கடவுளை பற்றியும், இனி எப்படி வாழ வேண்டும் என்பது பற்றியும், இயற்கையை பயன்படுத்தி எப்படி வாழ வேண்டும் என்பது பற்றியும் சிந்தித்து வாழ்வதுதான் ஞானம். அந்த ஞானத்தை பெற்று அதை தங்களது சீடர்களுக்கு போதிப்பவர்கள்தான் குருமார்கள். பாரத மாதா பல ஞானிக்களை உருவாக்கிவருகிறார்.
இந்த பூமியில் தோன்றிய 63 நாயன்மார்களில் மெய்பொருள் நாயனார் சைவத்தின் பெருமையை, திருநீற்றின் பெருமையை உலகறிய செய்தவர். அவர் விட்டுச் சென்ற பணியை உலகறியச் செய்ய மிகப்பெரிய சான்றாக மெய்பொருள் நாயனார் திருமடத்தின் நிறுவனர் விநாயகமூர்த்தி விளங்குவார் என்றார். மாலை 6 மணியளவில் திருமடத்தின் முதலாவது குருநாதர் ஸ்ரீலஸ்ரீ ராமகிருஷ்ணன் சுவாமிகள் மற்றும் குருநாதர் ஸ்ரீமெய்பொருள் நாயனாருக்கு சிவ கண வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 7.45மணியளவில் விநாயகர் மற்றும் குருநாதர் மெய்ப்பொருள் நாயனார் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.சரவணன் மெய்ப்பொருள் நாயனார் திருமடத்தின் செயலாளர் ஆசுப்பிரமணியன் இறைபணி சித்தர் ஏ முத்து முத்துகிருஷ்ணன் கிருஷ்ண இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ஆர். அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க உள்ளனர். விழாவையொட்டி மெய்ப்பொருள் நாயனார் திருமடத்தின் சார்பில்கடந்த ஆண்டு நடைபெற்ற 10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 மதிப்பெண் பெற்றவர்களுக்க டேபிள் மேட் வழங்கப்பட்டதோடு மேலும் 100 பேருக்கு வஸ்திரதானம் மற்றும் 50 மாணவர்களுக்கு ஸ்கூல் பேக்கும் வழங்கப்பட்டது.
இந்தவிழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சாணிப்பூண்டி மெய்ப்பொருள் நாயனார் திருமடத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் மெய்ப்பொருள் அடிமை விநாயகமூர்த்தி சுவாமிகள், பொருளாளர் ஜோ.கலைசெல்வி விநாயகமூர்த்தி மற்றும் வி.அபிராமி, வி.மகாலிங்கம் மெய்ப்பொருள் நாயனார் சிவனடியார் திருக்கூடத்தை சேர்ந்த பி.கிருஷ்ணன் எஸ். பிரவீன் கோ.மணிசேகர் எஸ்.பிரபு பி.சந்துரு டி.சக்திவேல் கே.தேவராஜ் எஸ்.குபேந்திரன் ஆர். ராஜா எம்.எஸ்.மாதேஷ் ஆர்.சிவக்குமார் எம். டி.கணேஷ் ஆர்.தரணிகுமார் பி.சந்தோஷ் எஸ்.சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். விழாநிகழ்ச்சியினை தமிழக அரசு விருதுபெற்ற நல்லாசிரியர் டாக்டர் பாபு கு.இராதாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். முடிவில் சாணிப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் என்.வெங்கட்ராமன் நன்றி கூறினார்.
