தலை தொங்கிய சி.சி.டி.வி. கேமராக்கள்

குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் மாநில சாலையில் வைக்கபட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.தலைகீழாகவும் , மரங்களை பார்த்து நிற்கும் அவல நிலையை காவல்துறை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போதைய கால கட்டத்தில் பல்வேறு முக்கிய குற்றம் சம்பவங்களை கண்டு பிடிப்பதற்கு உறுதுணையாக காவல் துறைக்கு தற்போது சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளன.மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல்துறை சார்பாக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குற்ற சம்பவங்களை கண்காணிக்கவும் தடுக்கவும் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தமாறு கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில் முக்கிய சாலைகளில் அந்தந்த கிராம ஊராட்சிகள் சார்பாக சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டது. அவ்வகையில் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் கீழ் ரோடு மாநில சாலையில் ஓரிக்கையில் ஆரம்பித்து அனைத்து கிராம ஊராட்சி மன்றங்களிலும் இந்த சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்ட நிலையில் , தற்போது இவை அனைத்தும் சாலையை கண்காணிக்காமல் பல்வேறு திசைகளை நோக்கியும் , தலைகீழாக தொங்கி காணப்படுகிறது.

Tags

Next Story