சிவகங்கை அருகே சரக்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் பலி

X
விபத்து
சரக்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்
மதுரை மாவட்டம், ஆனையூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் என்பவரின் மகன் பாலசுப்பிரமணியன். இவர் தனது டாடா ஏஸ் வாகனத்தில் சிவகங்கையை அடுத்த அழகாபுரி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே நாகப்பட்டினம் மாவட்டம் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் தயாநிதி என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயமடைந்த பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் காளையார்கோவில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags
Next Story
