மாணவியை தாக்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்
சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் மாணவியை தாக்கிய தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக திருமுருகவேள் பணியாற்றினார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5-ம் வகுப்பில் பாடம் நடத்தினார். அப்போது அவர் கேள்வி ஒன்றுக்கு சரியாக பதில் சொல்லாத மாணவி ஒருவரின் மீது கம்பை வீசியதாக கூறப்படுகிறது.
அந்த கம்பு சம்பந்தப்பட்ட மாணவியின் மீது படாமல் அருகில் இருந்த கங்கையம்மாள் என்ற மாணவி மீது பட்டதுஇதில் அந்த மாணவியின் இடது கண்ணில் கம்பு குத்தியால் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் கொடுத்தபுகாரின் பேரில் தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி தலைமை ஆசிரியர் திருமுருகவேளை கைது செய்தனர். மேலும் துறைரீதியாக விசாரணை நடத்திய மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ், தலைமை ஆசிரியர் திருமுருகவேளை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Next Story