தலைமை ஆசிரியையை தாக்கிய விவகாரம் - சி.இ.ஒ விசாரணை

தலைமை ஆசிரியையை தாக்கிய விவகாரம் - சி.இ.ஒ விசாரணை
முஞ்சிறை அரசு பள்ளியில் விசாரித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் .
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே முஞ்சிறை அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கிள்ளியூரை சேர்ந்த பென்சியாள் (41) பள்ளி மேலாண்மை குழு தலைவராக உள்ளார். சம்பவத்தன்று பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறை, சமையலறை போன்றவற்றை பள்ளி நிர்வாகத்தின் அனுமதியின்றி மேலாண்மை குழு உறுப்பினர் சுரேஷ் என்பவருடன் சேர்ந்து செல்போன் புகைப்படம் பிடித்துள்ளார். இதைக் கண்ட மாணவர்கள் செல்போனை பிடுங்கி எடுத்து, தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். தலைமை ஆசிரியை புதுக்கடை போலீசில் தகவல் தெரிவித்து, .போலீசார் விசாரித்துள்ளனர். இந்த ஆத்திரத்தில் மாலையில் பள்ளி தலைமை ஆசிரியை வீட்டுக்கு செல்வதற்காக பள்ளிக்கூடத்திற்கு முன்பு வந்த போது, தலைமை ஆசிரியையும், இரண்டு மாணவிகளையும் மேலாண்மை குழு தலைவி தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி பள்ளிக்கு வந்து நேற்று விசாரணை நடத்தினார். மேலாண்மை குழுவிடம் தனித்தனியாக விசாரித்துள்ளார். தொடர்ந்து உறுப்பினர்கள் ஆதரவுடன் மேலாண்மை குழுவை கலைத்துவிட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது

Tags

Next Story