சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணி துவக்கம்
சுகாதார வளாகம் பூமி பூஜை
புதிய சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
திருச்செங்கோடு ஒன்றியம், தேவனாங்குறிச்சி ஊராட்சி, முப்பட்டாம்பாளையம் மேட்டுப்பாறை பகுதியில் ரூ.7,85,000 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு பணிகளை தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் வட்டூர் தங்கவேல், ஊராட்சி மன்ற தலைவர் அருண் குமார் , ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மேனகா கார்த்திக், துணை தலைவர் ரஞ்சனி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story