சாக்கார் உடுப்பத்தில் ஆமை வேகத்தில் நடக்கும் சுகாதார வளாக கட்டிட பணி

சாக்கார் உடுப்பத்தில் ஆமை வேகத்தில் நடக்கும் சுகாதார வளாக கட்டிட பணி
X

கட்டிட பணிகள் தொய்வு

சேந்தமங்கலம் அடுத்த புதுச்சத்திரம் யூனியன் உட்பட்ட சர்க்கார் உடுப்பம் பஞ்., முத்துடையார்பாளையம் அருந்ததியர் காலனியில் கடந்த 2020ம் ஆண்டு சுவச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டும் பணி துவங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடக்கும் சுகாதார வளாகம் கட்டிடப்பணி நிறைவடையாமல் தற்போது கிடப்பில் போடப்பட்டுளளது. பஞ்., நிர்வாகம், யூனியன் அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளின் மெத்தன போக்கிணால் அரசு பணம் வீணடைக்கப்படும் நிலையில் சுகாதார வளாகம் கட்டிடம் பணி நடைபெறாமல் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்மந்தமாக அப்பகுதிமக்கள் யூனியன் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. சுகாதார வளாகம் கட்டும் பணியை முடிக்காத ஒப்பந்ததாரர், புதுச்சத்திரம் யூனியன் அதிகாரிகளின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு, சுகாதார வளாகம் கட்டும் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story