கழிவுப்பொருட்களை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்

கழிவுப்பொருட்களை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்

சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவு பொருட்கள்

திருச்செங்கோடு அருகே கழிவுப்பொருட்களை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு செங்கோடம்பாளையம் மின் மயானம் செல்லும் வழியில் சவ ஊர்வலத்தில் கொண்டு செல்லும் மாலைகள் கழிவு பொருட்களை சாலையின் ஓரத்திலேயே கொட்டப்பட்டு வருகிறது.

மேலும் கோழி இறைச்சிகள் போன்ற பொருட்களும் கொட்டப்பட்டு வருகிறது இதனை தடுக்க நகராட்சியும் பலமுறை அறிவுறுத்தியும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இது போன்ற கழிவு பொருட்களை கொட்டப்பட்டு வருவதால் அப்பகுதியில் துர்நாற்றம் அடித்து சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் நகராட்சி நிர்வாகம் இணைந்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே இந்த நிலைமை மாறும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்

Tags

Next Story