சாலை விபத்தில் சுகாதார ஆய்வாளர் பலி - போலீசார் விசாரணை
காவல் நிலையம்
தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டப்பட்டியைச் சேர்ந்தவர் சென்றாயன் இவர், சென்னை சேத்துப்பட்டுவில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 1ம் தேதி உறவினர் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றாயன் டூவீலரில் புறப்பட்டு வந்தார்.
அரூர் - திருவண்ணாமலை சாலையில் தெற்கு முனியப்பன் கோயில் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சாலையோர மரத்தில் மோதியது. இதில், சென்றாயன் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, சென்றாயன் நேற்று மாலை உயிரிழந்தார்.
இதுகுறித்து கோட்டப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த சென்றாயனுக்கு கனிமொழி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.