தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக நுரை

தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக நுரை

கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் நீரில் 5வது நாளாக குவியல் குவியலாக நுரை வெளியேறுகிறது.


கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் நீரில் 5வது நாளாக குவியல் குவியலாக நுரை வெளியேறுகிறது.

ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் நீரில் 5வது நாளாக குவியல் குவியலாக நுரை வெளியேறுகிறது. நீர் வெளியேற்றம் குறைத்தபோதும் குறையாத ரசாயன நுரையின் அளவு குறையவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தொடர்ந்து நான்காவது நாட்களாக 500 கனஅடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டபோது, குவியல் குவியலாக நுரைப்பொங்கி சென்றது. ஆனால் இன்று நீரின் அளவு குறைந்தபோதும் நுரையின் அளவு குறையாதது விவசாயிகளை கவலையட வைத்துள்ளது. கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டம் நந்திமலையில் உற்ப்பதியாகும் தென்பெண்ணை ஆறு அம்மாநிலத்தில் 114 கிமீ தூரம் பயணித்து தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக 320 கிமீ தூரம் பயணித்து வங்க கடலில் சங்கமிக்கும் ஆறாக தென்பெண்ணை ஆறு உள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூர் பெருநகர கழிவுகள் வரத்தூர் ஏரி என்னுமிடத்தில் தென்பெண்ணை ஆற்றில் கலக்கப்படுகிறது. அதன்பிறகு தென்பெண்ணை ஆற்றங்கரையோரமாக உள்ள தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் கலப்பதால் நீர் துர்நாற்றம் அடைந்து மாசு ஏற்படுகிறது.

நான்கு நாட்களாக தென்பெண்ணை ஆற்றில் நீர் அளவு 400 முதல் 500 கனஅடிநீர் விநாடிக்கு திறக்கப்பட்ட நிலையில், இன்று விநாடிக்கு 240 கனஅடிநீர் மட்டுமே ஆற்றில் திறக்கப்பட்டாலும் கருநிறத்தில் வெளியேறும் நீரில் 2 அடி உயரத்திற்கு நுரைப்பொங்கி மேகங்களை போல நகர்ந்து வருகிறது..கருநிறத்தில் நாற்றமடிக்கும் நீரில் நுரைப்பொங்கி செல்கின்றது. தென்பெண்ணை ஆற்று நீர், மாசடைவது குறித்து பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி கர்நாடகா – தமிழகம் இருமாநில மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நீர் மாதிரிகளை சேமித்து சென்றபோதும் இதுவரை அதற்கான முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Tags

Next Story