ஆத்தூர் : கொத்தாம்பாடியில் சாலையோரம் கொட்டப்பட்ட கால்நடை மருந்து குவில்கள்

கொத்தாம்பாடியில் சாலையோரம் கொட்டப்பட்ட கால்நடை மருந்து குவில்கள்

கொத்தாம்பாடியில் சாலையோரம் கொட்டப்பட்ட கால்நடை மருந்து குவில்கள்
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது.சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில் தனியார் திருமண மண்டபம் அருகில் சாலையோரத்தில் குவியல் குவியலாக கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்து பாட்டில்கள் கொட்டி கிடைக்கின்றன.
குறிப்பாக வெள்ளை கழிச்சல் நோய்களுக்கான மருந்து, மலட்டு தன்மை மருந்து,தடுப்பூசி உள்ளிட்டவைகளுக்கான ஆயிரகணக்கான மருந்து பாட்டில்கள் கொட்டிக் கிடக்கின்றன. மேலும் மருந்து பாட்டில் பயன்படுத்தப்பட்ட நிலையிலும் பயன்படுத்தப்படாத நிலையிலும் பண்டல் குவிலாக கிடப்பதால் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


