அரசு மருத்துவமனையில் காதுகேட்கும் கருவி வழங்கும் முகாம்

அரசு மருத்துவமனையில் காதுகேட்கும் கருவி வழங்கும் முகாம்
காதுகேட்கும் கருவி வழங்கும் முகாம்
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த காதுகேட்கும் கருவி வழங்கும் முகாமில் 15 பயனாளிகளுக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காதுகேட்கும் கருவி வழங்கும் முகாம் நடைபெற்றது. மருத்துவமனையில் நடைபெற்ற இம்முகாமுக்கு, மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பிரேமலதா தலைமை வகித்தாா். முதலமைச்சா் காப்பீடு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் முன்னிலை வகித்தாா். டாக்டா் மணிமாலா முகாமில் கலந்துகொண்டு செவித்திறன் பாதுகாப்பு, காது, மூக்கு, தொண்டை நோய் சிகிச்சையில் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து பேசினாா். மருத்துவா்கள் ராஜேஷ், கீதா, காா்த்திக் அறிவுடைநம்பி ,ரெக்ஸ், மேலாளா் ரவி, ஜெயந்தா, திருமலை, செவிலியா்கள் மற்றும் மருத்துவ பணியாளா்கள் கலந்து கொண்டனா். உறைவிட மருத்துவ அலுவலா் செல்வபாலா வரவேற்றாா். தலைமை குடிமை மருத்துவா் சரஸ்வதி நன்றி கூறினாா்.

Tags

Next Story