சுண்ணாம்புக்கல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்
சிந்தாமணிபட்டியில் சுண்ணாம்புக்கல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, சிந்தாமணிபட்டி, கீழ பகுதி கிராமத்தில் உள்ள வசந்தம் மஹாலில், கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து, வரவணை பகுதியில் சேகர் மைன்ஸ் சார்பில் சுண்ணாம்புக்கல் குவாரி அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஜெயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வந்த போதும், கருத்துக்கேற்ப கூட்டத்திற்கு மிக சொற்ப அளவிலேயே வந்ததால், கூட்டத்திற்க்காக போடப்பட்ட சேர்கள் காலியாகவே காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். அப்போது கல்குவாரி அமைப்பதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக இயற்கை ஆர்வலர்களும், கல்குவாரி அமைப்பதனால் வேலை வாய்ப்பு கிராமப் பகுதியில் பெருகும் என ஒரு சிலரும் கருத்துக்களை பதிவு செய்தனர். பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Next Story