கோவை மாவட்டத்தில் வெப்ப அலை வீசக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
பைல் படம்
கோவை மாவட்டத்தில் வரும் நாட்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மதிய வேளைகளில் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறு ஆட்சியர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிக்கையில் தமிழ்நாட்டின் வட உள் மாவட்டமான கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில் உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் தெரிவித்துள்ளது.இந்த அறிக்கையை பின்பற்றுமா கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story