தூத்துக்குடியில் வாக்குப்பதிவு நாளன்று வெப்ப அலை :ஆட்சியர் ஆலோசனை

தூத்துக்குடியில் வாக்குப்பதிவு நாளன்று வெப்ப அலை :ஆட்சியர் ஆலோசனை

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நாளன்று வெப்ப அலை குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வாக்குப்பதிவு நாளன்று வெப்ப அலை குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கூட்டம் இன்று (12.04.2024) காலை 11.00 மணிக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள், மூத்தகுடி மக்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கப்படுவது குறித்தும், அனைத்து வாக்குச்சாவடிகளில் போதிய பந்தல் (15x15) மற்றும் சேர்,

கழிவறை, தண்ணீர் வசதி, மின் விளக்கு, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்குப்பதிவு நாளன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ழுசுளு பொருத்தப்பட வேண்டும் எனவும், மேலும் மண்டல அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனுப்பப்பட வேண்டிய அறிக்கைகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஏ.ழு.ஊ நுபெiநெநச ஊழடடநபந -ல் செய்யப்பட வேண்டிய முன் ஏற்பாடுகள், அடிப்படைய வசதிகள், கணிணி வசதிகள் போன்றவை குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சித் தலைவர் அவர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story