வெயிலின் தாக்கம்: பொது சுகாதார துறை அறிவுரை
கோப்பு படம்
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்ப அலைகளின் தாக்கம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஏற்கனவே வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வெளியே செல்லும் பொழுதும், வீட்டில் இருக்கும் பொழுதும் தேவையான அளவிற்கு குடிநீரை பருக வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் வியர்வை மூலம் நீர் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். பச்சிளம் குழந்தைகள்,
நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் வயது முதிர்ந்தோர், நோய்வாய் பட்டவர்கள் வெயிலில் செல்ல கூடாது. அடிக்கடி வேலை நிமித்தமாக வெயிலில் செல்லும் நபர்கள், திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் போதிய அளவுக்கு குடிநீரை பருக வேண்டும் மேலும் ORS எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருக வேண்டும் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புதுறை அறிவுறுத்தி உள்ளது.
பொதுமக்கள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நல வாழ்வு மையங்கள்,துணை சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ORS - உப்பு சர்க்கரை கரைசல் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.