வெப்ப அலை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக்கூட்டம்

வெப்ப அலை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை  ஆய்வுக்கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெப்ப அலை செயல்திட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பல்வேறு வழிகாட்டுதல்களை ஆட்சியர் வளர்மதி வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெப்ப அலை செயல்திட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்ட கலெக்டர் வளர்மதி பேசுகையில்,"வெப்ப அலை வீசுவது தொடர்பான துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் ஊழியர்கள் எளிதில் அணுகக்கூடிய இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். வேலை நேரம் முன்கூட்டியே தொடங்கப்பட வேண்டும். சரக்கு ஏற்றுதல், வெளிவேலை செய்யக்கூடியவர்கள், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர்கள், கட்டுமானம் மற்றும் சாலை பணியாளர்களுக்கு வேலை நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்.

அனைத்து வேலை இடங்களிலும் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு எலுமிச்சை சாறு, மோர், ஓ.ஆர்.எஸ். கரைசல் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெப்ப அலை வீசும் நாட்களில் குழந்தைகள், முதியவர்கள் ஆகியோர் காலை 11 மணி முதல் வெளியே வருவதை தவிர்த்து வீட்டிலேயே இருக்க வேண்டும். போதிய அளவு குடிநீர் அருந்த வேண்டும். பஸ் நிலையங்கள், சந்தைகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், சுற்றுலாத்தலங்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற பொது இடங்களில் போதுமான குடிநீர் வசதிகள், ஓய்வெடுக்கும் அறை, அவசர மருத்துவ வசதிகள் கிடைப்பதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்,"என அவர் பேசினார்.

Tags

Next Story