தீபாவளி போனஸ் வழங்க கோரி சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தீபாவளி போனஸ் வழங்க கோரி சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் தீபாவளி போனஸ் வழங்க கோரி சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மூட்டை சிப்பத்திற்கு ரூபாய் 30 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழகம் முதல்நிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story