நல்லம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் கடும் பனிமூட்டம்

நல்லம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் கடும் பனிமூட்டம்

பனிமூட்டம்

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சீதோசன நிலையால் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது இன்று நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக நல்லம்பள்ளி, கோவிலூர், அதியமான் கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டு கடும் பனிமூட்டம் நிலவுகிறது இதனால் ஊட்டி போல் மாறி காட்சி அளிப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story