நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம்

கடும் பனிப்பொழிவு காரணமாக தருமபுரி, அதியமான் கோட்டை, நல்லம்பள்ளி, தொப்பூர் உள்ளிட்ட சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளுடன் பயணிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் தற்போது தமிழ் மாதமான தை மாதம் நடைபெற்றுக் கொண்டுள்ளது இயல்பாக தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப பனி விலகி கோடை காலம் ஆரம்பிக்கும் என்பதற்கான அடையாளமாகும். ஆனால் தற்போது தை மாதம் பிறந்து 15 நாட்கள் மேலாகியும் குறிப்பாக தருமபுரி, அதியமான் கோட்டை, நல்லம்பள்ளி, தொப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை போட்டப்படி செல்கின்றனர். கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் காலை நேரங்களில் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.இந்த சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக பல்வேறு விவசாய பணிகள் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story