பிரதமர் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்
நெல்லை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி அம்பாசமுத்திரம் வரவுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவரை ஆதரித்து இன்று அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகஸ்தியர்பட்டியில் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனை தொடர்ந்து இன்று காலை முதல் அம்பாசமுத்திரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
Next Story