கிருஷ்ணகிரி பாலிடெக்னிக் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையமான கிருஷ்ணகிரி பாலிடெக்னிக் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையமான கிருஷ்ணகிரி பாலிடெக்னிக் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கட்சிகளின் முகவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் சட்டமன்ற வாரியாக தனி தனி கேட் மூலமாக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி சீட்டு பெற்றவர்கள் தவிர்த்து பிறர் யாரையும் அனுமதிக்கவில்லை.

கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை தலைமையில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் என 808 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் 6 சட்டமன்ற தொகுதிகளும் தனிதனியாக எண்ணப்படுவதால் 94 மேசைகள் தயாராக உள்ளது.. 16 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் 1333 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ண உள்ளது இதில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் என்னும் பணி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர்

Tags

Next Story