வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் 

தீவிர சோதனைக்கு பின் கட்சிகளின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

கோவை:2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது.முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. கோவை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது முடிந்ததை தொடர்ந்து அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு அதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்றது அதன்படி கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் இருந்து 100 மீட்டர்க்கு எந்த ஒரு கட்சியினரும் பொதுமக்களும் அனுமதிக்கப்படவில்லை..

Tags

Next Story