மதுராந்தகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் ஆர் எஸ் எஸ் இயக்கம் சார்பில்ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் சீருடை உடன் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் மதுராந்தகத்தில் இன்று ஏரி காத்த கோதண்டராமர் கோவிலில் இருந்து மாலை 4.00 மணிக்கு சுவாமி விஷ்ணுமயானந்தா மஹராஜ் அவர்கள், கொடி அசைத்து துவக்கி வைக்கிறார்.

அதனைத் தொடந்து ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மதுராந்தகத்தின் முக்கிய வீதிகள் வழியாக இசைவாத்தியம் முழங்க அணிவகுத்து . அணிவகுப்பு பாதையில் மகளிர் மலர் துாவி வரவேற்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பானது மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவிலில் துவங்கி , நகரின் முக்கிய வீதிகளில் சென்று முடிவடையும் அணி வகுப்பில் 200க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் தேச பக்தர்கள் சீருடை அணிந்து பங்கேற்றனர்.

மாலை 5.00 மணி அளவில் மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் அருகில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த நிலையில் இந்த ஆர் எஸ் எஸ்ஊர்வலத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும்விதமாகசெங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரீணித் அவர்கள் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஊர்வல பாதை அனைத்தும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags

Next Story