தொடர்மழை எதிரொலி- பக்கிங்காம் கால்வாயில் நீர்வரத்து அதிகரிப்பு

தொடர்மழை எதிரொலி- பக்கிங்காம் கால்வாயில் நீர்வரத்து அதிகரிப்பு
தொடர்மழை எதிரொலி- பக்கிங்காம் கால்வாயில் நீர்வரத்து அதிகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கோவளம், வடநெம்மேலி, கிருஷ்ணன்காரனை, பட்டிபுலம், மாமல்லபுரம், கடம்பாடி, மணமை, கல்பாக்கம் பகுதியில் உள்ள சிறு குளங்கள், ஏரிகள் நிரம்பி உபரிநீர் கால்வாயில் கலப்பதால் நீர்வரத்து வழக்கத்தை விட அதிகமாக வரத்துவங்கி உள்ளது.

பக்கிங்காம் கால்வாய் வெள்ளம் வேகமாக கடலுக்கு செல்லும் வசதியாக, வருவாய் மற்றும் பொதுப்பணித் துறையினர் கோவளம், கல்பாக்கம முகத்துவார பகுதிகளை பொக்லைன் வைத்து மணல்களை தூர்வாரி வைத்துள்ளனர். அதனால் மழைநீர் வெள்ளம் தற்போது சீறாக கடலில் கலந்து வருகிறது. இன்னும் மழை தொடர்ந்து பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதற்கான கூடுதல் பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கை குறித்து மாமல்லபுரம் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story