திடீரென கொட்டி தீர்த்த கனமழை

திடீரென கொட்டி தீர்த்த கனமழை
X
மழை
சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கனமழை பொழிந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சங்ககிரி நகர், வைகுந்தம், மகுடஞ்சாவடி, கத்தேரி, தேவூர்,அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி,ஒடசக்கரை, மூலப்பாதை, வட்ராம்பாளையம், மோட்டூர், தண்ணீர்தாசனுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் திடீரென மாலை வேளையில் லேசான காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வாகன ஓட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.மேலும் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவிவருவதால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story