கனமழை : தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை : தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
X

குளம்போல் தேங்கியுள்ள மழை நீர் 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 12 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி பிரதான வ உ சி சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் . கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்.

Tags

Next Story