ஆத்தூர் பகுதியில் திடீரென பெய்த மழை
ஆத்தூர் பகுதியில் மழை
ஆத்தூர் அருகே கருமந்துறை பகுதியில் திடீர்ரென பெய்த மழையால் விவசாயிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கருமந்துறை கல்வராயன் மலைப்பகுதியில் காலை முதலே கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாக திடீரென மழை பெய்தது. இதனால், அனல் காற்று வீசி தற்போது குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள்,வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story