கோவையில் கொட்டி தீர்த்த மழை
கோவையில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்த நிலையில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் காந்திபுரம்,ராமநாதபுரம்,டவுன்ஹால், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
மழை காரணமாக லங்கா கார்னர்,அவினாசி மேம்பாலம் ரயில்வே மேம்பாலம் பகுதிகளில் தண்னீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். லங்கா கார்னர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை மின்மோட்டர் மூலம் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து சில தினங்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story