தர்மபுரியில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை

வெப்ப சலனம் காரணமாக தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் திடீரென கனமழை கொட்டியது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பொழிந்து வருகிறது இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கலந்து சில நாட்களாக காலை மற்றும் இரவு நேரங்களில் மலைக் கொட்டி தீர்த்து வருகிறது இதனுடைய இன்று பிற்பகல் 2 மணி முதல் தர்மபுரி நான்கு ரோடு, நெசவாளர் காலனி, இலக்கியம்பட்டி, செந்தில் நகர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நான்கு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. காலை முதல் கடுமையான வெப்பம் நிலவிய நிலையில் திடீரென பொழிந்த கன மழையால் பொதுமக்கள் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story